அண்ணாமலை போல் நானும் செய்வேன்! அதே சாட்டை, அதே பச்சை வேட்டித்துண்டு -பா.ஜ.க நிர்வாகி வைரல் வீடியோ

அண்ணாமலை போல் நானும் செய்வேன்! அதே சாட்டை, அதே பச்சை வேட்டித்துண்டு -பா.ஜ.க நிர்வாகி வைரல் வீடியோ

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போராட்டத்தில் நாங்களும் பங்கு பெறுவோம் என்று கூறி பாஜாக நிர்வாகி ஒருவர் சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் மேற்கொண்டார்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்திற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பல இடங்களில் போராட்டமும் நடைபெற்றது. சமூக வலைத்தளங்களிலும் கண்டனம் எழுந்தது.இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுக அரசு மீது குற்றம் சாட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காளப்பட்டி பகுதியில் உள்ள அவரது இல்லம் முன்பு ஆறு முறை சாட்டையால் தன்னை தானே அடித்து கொண்டு போராட்டம் மேற்கொண்டார்.

இதையடுத்து கோயம்புத்தூர் மாவட்டம் அரசூரையடுத்த ஊத்துப்பாளையம் பகுதியில் வசிக்கும் பாஜக தொண்டரான முருகேஷ் என்பவரும் அதேபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். முருகேஷ் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போராட்டத்தில் நாங்களும் பங்கு பெறுவோம் என்று கூறி அவரது இல்லம் முன்பு சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் மேற்கொண்டார்.பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆறுமுறை சாட்டையால் அடித்துக் கொண்ட நிலையில் முருகேஷ் பத்து முறை சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி

வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!