மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத தேச விரோத கொள்கைகளைக் கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் வருகிற 26-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவித்துள்ளனர் இதற்கான பிரச்சாரம் மற்றும் ஆர்ப்பாட்டம் சோழவந்தான் வட்ட பிள்ளையார்கோவில் அருகே நடந்தது இந்தப் பிரச்சாரம் ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி ஒன்றியச் செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜோதி ராமலிங்கம் முன்னிலை வகித்தார் மாவட்ட துணைத்தலைவர் விருமாண்டி வரவேற்றார் ஏஐடியூசி மாவட்ட பொதுச்செயலாளர் நந்தா சிங் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பிரச்சாரம் செய்தார் இதில் முகமது பிச்சை உள்பட பலர் கலந்து கலந்து கொண்டனர்.