விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே முதுகுடி பகுதியில் இராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் நூல் மில் நடத்தி வருகிறார் நூல் மில்லில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது தீ விபத்து ஏற்பட்டது அடுத்து இராஜபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராமன் மற்றும் தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் போராடினார் இருப்பினும் நூற்பாலையில் உள்ள நூல்கள் மற்றும் மூன்று மிஷின்கள் முற்றிலும் தீயில் எரிந்து நாசம் ஆனது இதன் மதிப்பு சுமார் 15லட்சத்திற்கு மேல் இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றனர்
இந்த தீ விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.