
சதுரகிரியில் திரைப்பட நடிகர் ப்ளாக் பாண்டி சாமி தரிசனம்!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது, இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாள், பிரதோஷத்திற்கு 2 நாள் என 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கின்றனர். இதன்படி, மார்கழி மாத பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு டிசம்பர் 28 முதல் இன்று வரை 4 நாள்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. மார்கழி மாத பிரதோஷம் மற்றும் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
பிரதோஷம் என்றாலே சிறப்பு வாய்ந்ததாக கூறப்படும் நிலையில் சனிப்பிரதோஷம் என்றால் இன்னும் சிறப்பு எனப்படுகின்றது. அதனால் இந்த வருடத்தில் இறுதியில் சனி பிரதோஷமானது வந்ததால் சதுரகிரிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
6.30 மணிக்கு மலையேறும் நுழைவாயில் திறக்கப்பட்டது. வனத்துறையினர் தீவிர சோதனை நடத்திய பிறகு பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கினார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் ஏராளமானோர் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். மேலும் மலைப்பாதைகளில் ஆங்காங்கே வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கோவில் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது. சனி பிரதோஷம் என்பதால் சுந்தர மகாலிங்க சுவாமிக்கு 18 வகையான அபிஷேகப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அமாவாசை அன்று காலை 4.30 மணிக்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
திரைப்பட நடிகர் சாமி தரிசனம்
காலையில் கடும் பனியும் மதியம் லேசான மழையும் பெய்தது, கடும் பனியையும், மழையையும் பொருட்படுத்தாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டில் இருந்தும் சிலர் வருகை தந்தது மட்டும் இல்லாமல் திரைப்படத் துறை சார்ந்த பிரபலங்களும் சதுரகிரி வந்து தரிசனம் செய்வது சமீப காலங்களில் அதிகம் ஆகிவிட்டது. அந்த வகையில் திரைப்பட நடிகர் ப்ளாக் பாண்டி அவர்கள் சனிக்கிழமை அன்று பிரதோசத்தை முன்னிட்டு மலையேறி சாமி தரிசனம் செய்தார். 4 நாட்களில் பத்தாயிரத திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருக்கலாம் என எனக்கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.