குமரி மாவட்டம் தமிழக கேரள எல்கையில் அமைந்துள்ள காவல் மற்றும் ஆர் டி ஓ சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விடிய விடிய சோதனை. கணக்கில் வாராத லட்ச கணக்கில் பணம் பறிமுதல். காவலர் உட்பட நான்கு பேரிடம் விசாரணை.
குமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்கையான படந்தால்மூடு பகுதியில் காவல் மற்றும் போக்குவரத்து அலுவலக (RTO) சோதனைச்சாவடிகள் இயங்கி வருகிறது.
இங்கு கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கும் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களும் பதிவு செய்ய 200 முதல் 1000 வரைக்கும் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது.
இது போல் காவல் சோதனை சாவடியிலும் அதிக பாரத்துடன் வரும் வாகனங்களை அனுப்ப 1000 முதல் 5000 வரை லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை டி எஸ் பி மதியழகன் தலைமையிலான அதிகாரிகள் விடிய விடிய சோதனை மேற்கொண்டு வருகின்றனர் .
களியக்காவிளை போக்குவரத்து அலுவலக (RTO) சோதனைச்சாவடியில் இருந்து 70 ஆயிரத்துக்கும் அதிக பணமும் , படந்தாலுமூடு காவல்துறை சோதனை சாவடியில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றி லஞ்ச ஒழிப்பு துறை DSP மதி அழகன் தலைமையில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.