குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வாகனத்தை `சர்வீஸ்’ செய்வது அவசியம். எண்ணெய்க் கசிவுக்கான காரணங்களைக் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும். மைலேஜ் டெஸ்ட் செய்ய வேண்டும்.
சிக்னலில் 30 வினாடிக்கு மேல் நிற்க வேண்டியிருந்தால், வண்டியை அணைத்துவிடலாம்.
தேவைப்படும் நேரம் தவிர மற்ற நேரங்களில்பிரேக் பிடிக்க வேண்டியதில்லை.
எந்நேரமும் கிளட்ச்சில் கால் / கை வைத்திருப்பது முறையல்ல.
குறிப்பிட்ட வேகத்துக்கு எந்த கியரோ, அதை அந்த வேகத்தலேயே பயன்படுத்த வேண்டும்.
இரு சக்கர வாகனங்களை சாய்வாக நிறுத்தக்கூடாது.
வண்டியை எடுக்கும் முன், இது அவசியம்தானா என ஒரு முறை யோசிக்கலாம். வாய்ப்பிருந்தால் தொலைபேசி வாயிலாகவே அந்த வேலையை முடிக்கலாம்.
குழுவாகச் செல்லும்போது மட்டும் பெரிய கார்களைப் பயன்படுத்த வேண்டும்.
தனியாகச் செல்ல இரு சக்கர வாகனமே போதும்.
எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு பஸ், ரயில், மெட்ரோ, கார் ஷேரிங், ஷேர் ஆட்டோ போன்ற பொது வாகனங்களைப் பயன்படுத்தலாம்..
ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரங்களுக்கு, நடந்தே செல்வது நலம் பயக்கும்,. நடக்க நடக்க, ஆயில்’ பயன்பாடு குறைந்து,ஆயுள்’ கூடும்!
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற கீழே உள்ள படத்தை கிளிக் செய்து வாட்ஸ்அப் குழுவில் இணையவும்.