
நடிகர் ரஜினியின் பிறந்தநாள் விழா – முருகனுக்கு தங்கத்தேர் இழுத்து ரசிகர்கள் வழிபாடு!
நடிகர் ரஜினிகாந்தின் 74 வது பிறந்த தினத்தை வைர விழா ஆண்டாகவும் திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டு சாதனைகளை தங்க வருடமாகவும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தங்கரதம் இழுத்து கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்தும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 12ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரஜினிகாந்த் ரசிகர்கள் ரஜினியின் “74” பிறந்தநாளை வைர ஆண்டு விழாவாகவும் (Diamond Jubilee year)நடிகராக திரைத்துறைக்கு வந்து 50 ம் ஆண்டுதங்க ஆண்டு விழாவாக (Golden Jubilee year) முருகனின் தங்கரதம் இழுத்துநீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி கொண்டாடினர்.
மதுரையை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் சார்பாக மாவட்ட பெறுப்பாளார் பாலதம்புராஜ், துணைத்தலைவர் அழகர், மாவட்ட செயலாளர் ஜாபர்,திருப்பரங்குன்றம்நகரச் செயலாளர்கோல்டன் சரவணன் மற்றும் ரஜினி மன்ற நிர்வாகிகள் ரஜினிகாந்தின் 74 வது பிறந்த தினத்தை முன்னிட்டு வைர விழா ஆண்டாகவும் திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் சாதனையாக தங்க விழா ஆண்டாகவும் ரஜினிகாந்த் குடும்பத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ சிறப்பு பிரார்த்தனையுடன் தங்கரதம் இழுத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதுரை ரஜினி மன்ற பொறுப்பாளர் பாலதம்புராஜ் கூறுகையில்:
சூப்பர் ஸ்டார் அவர்கள் 74 ம் ஆண்டு பிறந்ததினா விழாவும் அவர் பூரண நலம் எண்டியும் குடும்பத்தினர் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் நலம் பெற வேண்டி தங்கரதம் இழுத்தோம் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு எட்டாம் தேதி முதியோர் இல்லத்திலும் பசுமலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட உள்ளோம்.
மாவட்ட துணைத் தலைவர் அழகர்கூறுகையில் தலைவரின் 74 வது பிறந்த தின விழாவை வைர விழா ஆண்டாகவும் திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை பொன்விழா ஆண்டாகவும் கொண்டாடி தலைவர் உண்ண நலம் வேண்டி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தங்கரதம் புறப்பாடு செய்தோம் எனக் கூறினார்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பரங்குன்றம் ரஜினி மன்ற நகரச் செயலாளர் கோல்டன் சரவணன் செய்திருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.