சீமான் சென்ற விமானம் தரையிறங்க முடியாமல் 20 நிமிடங்களாக வானில் வட்டமடித்ததால் பரபரப்பு..!!!
மதுரை மேலூர் அருகேஅரிட்டாபட்டியில் டங்ஷ்டன் கனிம சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நாளை காலை மணிக்கு மேலூர் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த நாம் தமிழர் கட்சியால் திட்டமிடபட்டிருந்தது.
அப்போது மோசமான வானிலை காரணமாக அவர் பயணம் செய்த விமானம் தரையிறங்க முடியாமல் கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேல் வானில் வட்டமடித்துள்ளது. மதுரை விமான நிலையத்தை அடைந்தபோது மோசமான வானிலை காரணமாக கருமேகங்கள் சூழ்ந்ததால் தற்போது விமானம் தரையிறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்தது. இன்று மாலை மணியளவில் தரையிறங்க வேண்டிய விமானம் மோசமான வானிலை காரணமாக 20 நிமிடங்கள் தாமதமாக பின்னர் பத்திரமாக தரையிறங்கியது. மேலும் இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வானிலை நிலவரம்:
வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதால், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு, எந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பது குறித்து பார்ப்போம்.
இன்று மழை பெறும் மாவட்டங்கள்:
தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
13-12-2024:
தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
தென்தமிழகத்தில் அநேக இடங்களில், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி,கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம். சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.