மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மண்டலம் 5 திருப்பரங்குன்றம் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது மண்டல தலைவர் சுனிதா விமல் தலைமையில் உதவி ஆணையர் ராதா, உதவி செயற் பொறியாளர் முத்து பாலசுப்பிர மணியன்,
செயற்பொறியாளர் பாக்கிய லெஷ்மி, திட்டமிடல் வளர்ச்சி அலுவலர் சாந்தி, சுகாதார ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் பல்துறை அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
99 வது மாமன்ற உறுப்பினர் உசிலை சிவா குறிப்பிடுகையில்
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதல்வரின் உத்தரவின் பேரில் 4 தொகுதிகளையும் வெற்றி பெற்றோம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அவர் வெற்றி பெற உதவிய அனைவருக்கும் நன்றி.
99 வதுவார்டு பகுதியில் உள்ள
செட்டிகுளம் வடிகால் வாய்க்கால் சீரமைக்க வேண்டும் மாமன் நகர் தேவி நகர், செங்குன்றம் நகர், பாலசுப்ரமணியம் நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைத்து சீரமைக்க வேண்டும் தற்போது மழைக்காலம் துவங்க உள்ளதால் மழை நீர் தேங்காத வகையில் வரும் முன்னரே பணிகளை துவக்கிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்
94வது மாமன்ற உறுப்பினர் ஸ்வேதா சத்தியன் குறிப்பிடுகையில்
சாலையில் இணைப்பு பாலம் அமைக்க 5 லட்ச ரூபாய்க்குள் அதிகாரிகள் கூறுகின்றனர் ஐந்து லட்ச ரூபாய்க்குள் எவ்வாறு அமைக்க முடியும் அவ்வாறு அமைத்தால் தரமற்றதாக அமையும் பொதுமக்கள் நம்மிடம் குறை கூறுகின்றனர் ஆகவே அதிகாரிகள் நல்ல தரமான பாலம் அமைத்து பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும்.
ஐந்து லட்ச ரூபாய் க்குள் பாலம் கட்ட வேண்டும் என்றால் அது தரமற்றதாகும் இது நமது முதல்வருக்கும் நமக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும்.
செய்தியாளர்கள் வந்து செய்தி போட்ட பின் சீரமைக்கும் பணியை மேற்கொள்ளாமல் முன்னதாகவே மாமன்ற உறுப்பினர்களை கலந்து பணிகளுக்கான வேலை அவற்றிற்கு நிதி ஒதுக்கி வேலையை துவங்க ஏற்பாடு செய்யுங்கள் என ஸ்வேதா சத்தியன் கூறினார்
98 வது மாமன்ற உறுப்பினர் ஹார்விபட்டி விஜயா கூறுகையில் அறிவுப்பட்டி பகுதியில் சாலைகள் முற்றிலும் சேதம் அடைந்து உள்ளது தற்போது முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீருக்காக தோண்டப்பட்ட சாலைகள் முற்றிலும் சேதம் அடைந்த பொதுமக்கள் போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக உள்ளது அவற்றை சீரமைக்க வேண்டும்.
மண்டல தலைவர் சுவிதா விமல் கூறுகையில் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தேர்தல் நடைமுறைகள் காரணமாக பல்வேறு பணிகள் தேங்கியுள்ளன. மதுரை மாநகராட்சி மேயர், ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் உதவியுடன் அவற்றை விரைந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.