கல்கி 2898 AD படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளிய நடிகர் ரஜினிகாந்த்.. இதோ

கல்கி 2898 AD 

பாகுபலி படத்திற்கு பின் பிரபாஸுக்கு எதிர்பார்த்த மாபெரும் வெற்றி கிடைக்கவில்லை. அந்த வெற்றியை தொடர்ந்து கல்கி 2898 AD திரைப்படம் கொடுத்துள்ளது என சொல்லப்படுகிறது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து கமல் ஹாசன். அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கல்கி 2898 AD படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளிய நடிகர் ரஜினிகாந்த்.. இதோ | Rajinikanth About Kalki 2898 Ad

பெரிதும் எதிர்பார்ப்பில் கடந்த 27ஆம் தேதி வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இரண்டு நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் உலகளவில் ரூ. 275 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் பதிவு

இந்த நிலையில், உலகளவில் கொண்டாடப்பட்டு வரும் கல்கி 2898 AD திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவை பாராட்டி பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற இயக்குனர் நாக் அஸ்வினுக்கு வாழ்த்துக்கள் என்றும் படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். மேலும் கல்கி 2898 AD திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு காத்திருக்கிறேன்” என பதிவு செய்துள்ளார்.

கல்கி 2898 AD படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளிய நடிகர் ரஜினிகாந்த்.. இதோ | Rajinikanth About Kalki 2898 Ad

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!