நாம் பயன்படுத்தும் ‘சும்மா’ எனும் வார்த்தைக்கு 15 வகையான அர்த்தம் உள்ளது.. உங்களால் நம்ப முடியுமா?

தமிழில் நாம் பயன்படுத்தும் இந்த சும்மா என்னும் வார்த்தைக்கு 15 வகையான அர்த்தம் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா?
“சும்மா” இதை படியுங்கள்..
நிச்சயம் நீங்கள் அசந்துதான் போவீர்கள்.

உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து இருந்த இடமே தெரியாமல் போயிருக்கின்றன. பல மொழிகளுக்கு எழுத்து வடிவமே கிடையாது. எழுத்து வடிவம் கொண்ட மொழிகளும் உணர்ச்சிகரமான, உயிரோட்டமுள்ள மொழிகளாக இருப்பதில்லை.

ஆனால் தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைப் படுத்திக் கொண்டிருக்கிறது.
சும்மா சொல்லுவோம் தமிழின் சிறப்பை,

அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான் இந்த சும்மா.
அது சரி சும்மா என்றால் என்ன?

பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும் தமிழ் மொழியில் நன்கு உள்வாங்கப்பட்டுள்ள ஒரு வார்த்தை இந்த சும்மா.

“சும்மா”என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15 அர்த்தங்கள் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை, நாம் அடிக்கடி கூறும் இந்த “சும்மா” எனும் வார்த்தை எடுத்துக் காட்டும்.

கொஞ்சம் “சும்மா” இருடா?
(அமைதியாக)..


கொஞ்ச நேரம் “சும்மா” இருந்து விட்டுப் போகலாமே? (இளைப்பாறி விட்டு)..


அவரைப் பற்றி “சும்மா” சொல்லக்கூடாது?
(அருமை)..


இது என்ன “சும்மா” கிடைக்கும்னு
நினச்சியா?
(இலவசமாக)..


“சும்மா” கதை அளக்காதே?
(பொய்)

“சும்மா” தான் இருக்கு.
நீ வேண்டுமானால் எடுத்துக் கொள் – (உபயோகம் இன்றி)..


“சும்மா” “சும்மா”
கிண்டல் பண்ணுறான். (அடிக்கடி)..


இவன் இப்படித்தான்.. சும்மா சொல்லிக்கிட்டு
இருப்பான்.(எப்போதும்)..


ஒன்றுமில்லை “சும்மா” சொல்கின்றேன். (தற்செயலாக)..


இந்த பெட்டியில் வேறெதுவும் இல்லை “சும்மா” தான் இருக்கின்றது (காலி)..


சொன்னதையே “சும்மா”சொல்லாதே (மறுபடியும்)..


ஒன்றுமில்லாமல் “சும்மா” போகக் கூடாது (வெறுங்கையோடு)..


“சும்மா” தான் இருக்கின்றோம் –
(சோம்பேறித்தனமாக)..


அவன் “சும்மா” ஏதாவது உளறுவான். (வெட்டித்தனம்)..


எல்லாமே “சும்மா” தான் சொன்னேன்.(விளையாட்டாக)..

நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த “சும்மா” என்கிற ஒரு சொல். நாம் பயன்படுத்தும் இடத்திற் கேற்பவும், தொடரும் சொற்களின் படியும் பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது என்றால் அது “சும்மா” இல்லை.
சும்மா வாவது சிந்தித்தீர்களா இதனை..?

உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை மட்டுமே.
ஆனால் தமிழ் மொழி மட்டும் வாயால் பேசி இதயத்தால் உணர வைக்கும் உயிரோட்டமுள்ள, உணர்வுள்ள மொழியாகும்.

Leave a Reply

error: Content is protected !!