கன்னியாகுமரி கடற்கரைக்கு சுற்றுலாபயணிகள் செல்ல மூன்று நாட்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலாதலங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி முக்கடல்சங்கம பகுதிக்கு சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்கள் மூன்று நாட்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.இன்று முதல் ஞாயிற்றுகிழமை வரை இந்த தடை நீடிக்கிறது.மேலும் இந்த மூன்று நாட்களும் பூம்புகார் படகுசேவையும் தடைசெய்யப்பட்டுள்ளது.