உலகப்புகழ்பெற்ற தாணுமாலயன் கோயிலில் கொடியேற்றம்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற தாணுமாலயன் திருகோவில் 10 நாட்கள் நடைபெறும் மார்கழி பெருந்திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் .

குமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் அமைந்துள்ள தாணுமாலய சுவாமி கோவில் உலக புகழ் வாய்ந்த கோவில் ஆகும். இங்கு படைத்தல், காத்தல், அழித்தல் கடவுகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் ஒரே வடிவில் கோவில் கருவறையில் அமைந்துள்ளார்கள் என்பது சிறப்பு அம்சமாகும்.மேலும் இங்கு இந்திரன் தினந்தோறும் கோவில் கருவறையில் பூஜை செய்வதாக ஐதிகம் உண்டு. இவ்வாறு மிக பழமை வாய்ந்த தாணுமாலைய சுவாமி கோவிலில் பல நூற்றாண்டுகளாக வருடந்தோறும் மார்கழி மாதம் 10 நாட்கள் பெருந்திருவிழா மிக பெரிய அளவில் விமர்சையாக நடைபெறுவது வழக்கம் இதனையொட்டி இந்த வருடத்திற்க்கான மார்கழி மாத திருவிழா நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததை தொடர்ந்து இன்று மார்கழி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்ச்சையாக துவங்கியது. இதில் குமரி மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரகணக்கான பக்தர்கள் கொடியேற்றத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். பத்து நாட்கள் நடைபெறுகின்ற இந்த திருவிழாவில் முக்கிய திருவிழாவாக 3 ம் திருவிழாவில் மக்கள்மார் சந்திப்பு என்ற முருகர், விநாயகர் ஆகியோர் தாய் தந்தையோடு சந்திக்கும் நிகழ்ச்சியும், 7 ம் திருவிழா நாளில் சாமி கைலாசபர்வத வாகனத்தில் வீதி உலா வரும் வைபவகமும் 9 ம் திருவிழாவில் காலையில் திருதேர் வடம் பிடித்து இழுக்கும் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தேரோட்டம் திருவிழாவையொட்டி டிச 29 ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

Leave a Reply

error: Content is protected !!