வெற்றிமாறன் இயக்கத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் சூரி,விஜய் சேதுபதி இணையும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதன்படி இப்படத்திற்கு ‘விடுதலை’ என பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதி வாத்தியாராக நடிக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு அற்ற சத்தியமங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. வெற்றிமாறன், விஜய்சேதுபதி, சூரி, பவானிஶ்ரீ உட்பட மொத்த படக்குழுவும் அங்கேயே குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தி, தங்கி படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைப்பயிற்சி இயக்குனராகவும், ஜாக்கி கலை இயக்குனராகவும் பணியாற்றுகின்றனர். தமிழில் தயாராகும் இப்படத்தை, பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர். விடுதலை என்ற பெயரில் ஏற்கனவே கடந்த 1986ம் ஆண்டு சிவாஜி, ரஜினி நடிப்பில் ஒரு படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

error: Content is protected !!