பூமி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாளாகும்.
1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல் (John McConnell). அவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார். அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார்.
அதே சமயத்தில், ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 நடத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.
அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்நாள் 175 நாடுகளில் பூமி நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பூமி நாளில் பொது மக்களிடையே அனைவரும் சுற்று சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
அதுமட்டுமன்றி மரம் நடவேண்டும். இதைக் கருத்தில் கொண்டு திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூகசேவை அறக்கட்டளையினர் மரம் வளர்ப்போம் மனித நலம் காப்போம் அழைப்பிதழ் அச்சிட்டு வழங்கி வருகிறார்கள் அழைப்பிதழில் அன்புடையீர்! தமிழ்நாட்டில் 17.59 சதவீத பரப்பளவு அதாவது 22,877 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தான் வனப்பகுதி கொண்ட பகுதியாக உள்ளது. ஒரு நாடு வளமான பகுதியாக இருக்க வேண்டும். என்றால் 33.3 சதவீதம் அடர்த்தியான வனங்களாக இருக்க வேண்டும். விளைநிலங்கள் விற்கப்பட்டு காங்கீரீட் கட்டிடங்களாக மாறிவிடுகின்றன. காட்டு வளமும் மளமளவென மாய்ந்து வருகின்றன. மர அழிப்பால் நிழற்பாங்கு குறைதல், மண் அரிப்பு ஏற்படுதல், வெள்ளப்பெருக்கு, வெப்ப மூட்டம் அதிகரித்தல், மழைப்பொழிவு குறைதல், நீர் தக்கவைப்பு குறைதல், வறட்சி ஏற்படுகிறது அது மட்டுமல்ல மரங்களை சார்ந்து வாழும் புழு, பூச்சி, பறவைகள், விலங்குகள் இன்று இடம் பெயர்ந்தும் காணாமல் போய்விடுகின்றன. ஒருவர் ஒரு மரம் வளர்த்தால் மனித சமூகம் வளரும். சமுதாயம் வளரும். வரும் சந்ததியினருக்கு பசுமையான சூழலை கொடுக்கலாம்.
நாம் ஒரு நிமிடத்திற்கு 15 முதல் 18 முறை சுவாசிக்கிறோம். ஒரு முறைக்கு 0.5 லி காற்றை சுவாசிக்கிறோம். ஒவ்வொரு நாளும் 22,000 முறை சுவாசித்து 16 கி.கி. ஆக்சிஜனை சுவாசித்து உயிர் வாழ்கிறோம். மனித சமுதாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும், சேவை செய்யும் மனப்பான்மையுடன் நமது தேவைக்காக மரம் நட்டு வளர்ப்போம் என்கிற வரணும், சுற்றுச்சூழல் மேம்பாடு மாசுபாட்டினை குறைத்திட பறவை இனங்களுக்கு புகலிடம் அளித்திட, மண்ணில் ஈப்பதத்தையும் வளத்தையும் தக்க வைத்திட, மண் அரிப்பை தடுத்திட, மழைப்பொழிவு ஏற்பட்டிட, காடு வளம் வேண்டி மரம் வேண்டும் என்கிற வரனும் இணைந்து பசுமை தமிழகமாக்க உள்ளார்கள். மரம் தானம் வழங்கி நட்டு நாட்டின் நலன் காக்கும் நல்லவர்களும், அறிஞர்களும், பொதுமக்களும், மகளிர்களும், இளைஞர்களும், திருநங்கைகளும், கல்லூரி தோழர்களும், தோழியரும் மற்றும் சுற்றமும் நட்பும் சூழ உறுதியேற்போம் தங்களன்புள்ள வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் அவ்வண்ணமே கோரும் விஜயகுமார் என அதிகம் சமூக சேவை அறக்கட்டளையினர் மரம் வளர்க்க அழைப்பிதழ் அச்சிட்டு ஏப்ரல் 22 பூமி நாளை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.