ஸ்ரீ வில்லிபுத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நகர செயலாளரை கண்டித்து அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்…..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் விதிகளை மீறி செயல்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அதிமுக நகர செயலாளர் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது மம்சாபுரம் பேரூராட்சி இப்பேரூராட்சியில் அய்யனார் என்பவர் ஏற்கனவே துணைத் தலைவராக இருந்தார். மேலும் இவர்தான் மம்சாபுரம் அதிமுக நகரச் செயலாளராகவும் உள்ளார்.

இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி மம்சாபுரம் அதிமுக நகர செயலாளர் அய்யனார் தனது பிறந்தநாளை பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து பேரூராட்சி அலுவலர்கள் உடன் கேக் வெட்டி கொண்டாடினார். அரசு அலுவலகத்தை தனது சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தியதை கண்டித்து திமுகவினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

error: Content is protected !!