இராஜபாளையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மாவட்ட வேளாண் துறையின் விரோத செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட வேளாண்துறையின் விவசாய விரோத செயலை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் பஞ்ச மார்க்கெட் பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று வேளாண்மை துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இராஜபாளையம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வேண்டுமெனவும், தென்னை காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும், தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய பணத்தை வசூல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்து பெற்று தரவேண்டும் எனக் கூறி மாவட்ட வேளாண்மை துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகம் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கோஷமிட்டனர்

Leave a Reply

error: Content is protected !!