நீட் தேர்வு தமிழ்க் கொலை..தனி மனித இடைவெளிக்கு ரூ 100 கோடி செலவு…எடப்பாடி மீது வழக்குப் பதிவு.

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதன்படி, நேற்று எடப்பாடி பழனிசாமி, சேலம் நெடுஞ்சாலை நகரில் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியினர் பதாகைகளை ஏந்தி திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் முதல் வேலையாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார். ஆனால், இதுவரை ரத்து செய்யப்படவில்லை. கண் துடைப்புக்காகவே கமிட்டி அமைத்துள்ளனர். கல்விக் கடன் ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000, பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு என, எந்த வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை.

எதன் அடிப்படையில் மின் கட்டணம் வசூலிக்கபடுகிறது என்றே தெரியவில்லை. மின் கணக்கீடு பெரும் குளறுபடியாக உள்ளது. அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. அதைச் சரிசெய்யவில்லை. அதிமுக ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழ்ந்தது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்ப அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போட்டு வருகின்றனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஸ்டாலின் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் போடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அதிமுக மக்கள் பிரச்சினைக்காகக் குரல் கொடுக்கும்.

திமுக ஆட்சியை விட்டுப் போகும்போது 1 லட்சம் கோடி கடன் வைத்துதான் சென்றார்கள். அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிக்காகவே கடன் வாங்கப்பட்டது. இது தற்போது கடனாக இல்லை, முதலீடாக உள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்வோம் என இதுவரை குரல் கொடுத்து வந்த திமுக அமைச்சர்கள், தற்போது மாணவர்களை நீட் தேர்வுக்குத் தயாராகுங்கள் என்கிறார்கள்.

மாணவர்கள் குறைந்த நேரத்தில் எவ்வாறு நீட் தேர்வுக்குத் தயாராக முடியும்? வேண்டுமென்றே திட்டமிட்டு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்து, பெற்றோர்களை ஏமாற்றி திமுக வெற்றி பெற்றுள்ளது. நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற எங்கள் கேள்விக்கு, இதுவரை திமுகவிடம் இருந்து பதில் இல்லை.

கொரோனாவைத் தடுக்க திமுக அரசு புதிதாக எதுவும் செய்யவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் செய்த நோய் தடுப்பு நடவடிக்கைகளை அவர்கள் பின்பற்றினார்கள். அவ்வளவுதான்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது திமுக அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதை மறந்து திமுகவினர் பேசுகின்றனர்”.

பழனிச்சாமியின் தமிழ் கொலை:

நீட் தேர்வை ரத்து செய்ரேன் சொன்னது என்னாச்சி… எடப்பாடி பழனிச்சாமியின் தமிழ் கொலை…

அதிமுக கட்சி இருக்கிறது என்பதை அதிமுகவை விரட்டியடித்த மக்களுக்கு காட்ட, திமுக அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் முதல்வரும் அதிமுக இணைஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி கையில் பிடித்திருக்கும் பதாகையில் உள்ள வாசகங்கள்..

எடப்பாடி பழனிச்சாமி கையில் ஏந்திய பதாகை

ஸ்டாலின் அரசே…நீட் தேர்வை ரத்து செய்ரேன் சொன்னது என்னாச்சி…

என்னாச்சு…என்னாச்சு என்று வாசகங்கள் இருக்க வேண்டும். அதை விட நீட் தேர்வை ரத்து செய்ரேன் என்ற வார்த்தை தமிழை கொலை செய்ததோடு, தமிழ் மொழியை கொலை செய்யும் எடட்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தாரே என்று நினைக்கும் போது தான் வேதனையாக இருக்கிறது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கையில் பிடித்திருக்கும் பதாகையில் என்ன எழுதி இருக்கிறது என்பதை கூட சரியாகப் பார்க்காமல் போராட்டம் செய்கிறார்….. 

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு,15 பேருடன் ஆர்ப்பாட்டம் செய்கிறார் ஆனால் முகக்கவசம் அணிய வில்லை,சமூக இடைவெளி விடவில்லை,தனிமனித இடைவெளி இல்லாமல் பாதி வேறு மாஸ்க் அணியாமல் பாதி வேறு மாஸ்க் அணிந்தும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இப்படி கொரோனாவை கட்டுப்படுத்த,முகக் கவசம் அணிய வேண்டும் தனிமனித இடைவெளி வேண்டும் என்ற விதிமுறைகளை மீறி அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டம் சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் 2.5.2021 வரை சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் கவசம் அணிய வேண்டும் அடிக்கடி கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று அதிமுக அரசு செய்த விளம்பர செலவு ரூபாய் 100 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக எடப்பாடிபழனிச்சாமி உள்ளிட்ட 90பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

Leave a Reply

error: Content is protected !!