கோவை சின்னக்கல்லாறில் 198 மி.மீ மழை பதிவு: சாலைகளில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி

கோவை: தமிழகத்தில் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், கோவையில் உள்ள சின்னக்கல்லாறில் 198 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று இரவு (செவ்வாய் கிழமை) கோவையின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. தொடக்கத்தில் சில மணி நேரங்கள் தூறல் மழையாக இருந்தது. பின்னர், மிதமான மழையாக தீவிரமடைந்தது.

குறிப்பாக 10 மணி முதல் 10.30 மணி வரை மழை அதிகளவில் பெய்தது. அதைத் தொடர்ந்து மழையின் வேகம் குறைந்தது. இந்நிலையில், இன்று (ஜூன் 26) காலை வெளியான அறிக்கையின்படி, கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் நிலவரம் தெரியவந்துள்ளது.

அதன்படி, வால்பாறை தாலுக்காவில் உள்ள சின்கோனாவில் 147 மில்லி மீட்டர், சின்னக்கல்லாறில் 198 மி.மீ, வால்பாறை பி.ஏ.பியில் 107 மி.மீ, வால்பாறை தாலுக்காவில் 107 மி.மீ, சோலையாறில் 122 மி.மீ, சிறுவாணி அடிவாரத்தில் 60 மி.மீ, மாக்கினாம்பட்டியில் 24 மி.மீ, பொள்ளாச்சியில் 20.80 மி.மீ, தொண்டாமுத்தூரில் 33 மி.மீ, வேளாண் பல்கலை.யில் 12.80 மி.மீ, ஆனைமலையில் 19 மி.மீ, பீளமேட்டில் 7.60 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.

மழையின் காரணமாக சாலைகளின் பல்வேறு தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியிருந்தது. சில மணி நேரங்களுக்குப் பின்னர் அவை வடிந்து அப்பகுதி சேறும், சகதியுமாக காணப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!