தீபாவளிக்கு ‘விடாமுயற்சி’ – அஜர்பைஜான் சென்றார் அஜித்

நடிகர் அஜித்குமார், ‘துணிவு’ படத்துக்குப் பிறகு நடித்து வரும் படம், ‘விடாமுயற்சி’. மகிழ் திருமேனி இயக்குகிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. இடையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட்பேட் அக்லி’ படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டார். அந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் முடிவடைந்து விட்டதை அடுத்து ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

இதற்காக இயக்குநர் மகிழ் திருமேனி உள்ளிட்ட படக்குழு ஏற்கெனவே அஜர்பைஜான் சென்றுவிட்டது. நடிகர் அஜித்குமார் நேற்று புறப்பட்டுச் சென்றார். ஒரு மாதம் வரை அங்கு படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இடையில் படப்பிடிப்பு இல்லாத சில நாட்களில் அஜித் சென்னை வந்துவிட்டு, மீண்டும் அங்கு செல்ல இருக்கிறார். படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!