MOVIE REVIEW: “பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்” லக்கி பாஸ்கர் படம் எப்படி இருக்கு..! -இராசகுரு கார் பாலன்

MOVIE REVIEW: “பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்” லக்கி பாஸ்கர் படம் எப்படி இருக்கு..! -இராசகுரு கார் பாலன்


அல்லூரி வெங்கட் இயக்கத்தில்
துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி நடிப்பில் G V பிரகாசு இசையில் வெளியானது தான் லக்கி பாஸ்கர் திரைப்படம்

“அம்புட்டு திருட்டுப் பயலுகளும், உன்னைய மாதிரி ஒரு கதைய வச்சிருப்பானுக, மூடிட்டு உள்ள போடா”

என ஒரு ஏட்டையா, அன்றாடம் புறக்கணிக்கும் கதைகளின் கருவாக ‘அவமானமே’ பெரும்பங்கு வகிக்கும்.

பிடிபடாத திருடனின் புறந்தள்ள முடியாத கதையே, லக்கி பாசுகர்.

மும்பையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் காசாளராக வேலை செய்கிறார் கதையின் நாயகன். நடுத்தர குடும்பம், ஊரெல்லாம் கடன், மகன்(பெப்சோடென்ட் விளம்பரத்தில் வரும் சிறுவன்), மனைவி (மீனாட்சி சௌத்ரி), அப்பா, தங்கை, தம்பி இவர்களும் இவருடன் வாழ்ந்து வருகிறார்கள்.

கடன் கொடுத்த ஒருவன் நடுத்தெருவில் பாசுகரின் சட்டைப்பையை கிழித்து, ஈருருளியை பிடுங்கிக்கொள்கிறான். தெருவின் பார்வை தந்த வலி, துணிச்சலுக்கு தூபம் போட, வங்கி பணத்தை முதல் முறையாக வெளி சுழற்சிக்கு பயன்படுத்துகிறான். வறுமை அவமானம் இயலாமை தந்த அழுத்ததால் துவங்கிய முதல்முயற்சி வெற்றி பெறவே, தொடர்கிறது.

தான் வேலை செய்யும் வங்கி வேறொரு வங்கிக்கு கடன் தருவதையும், கடன் பெறும் வங்கியின் பணத்தை ஒரு இடைத்தரகர் சட்ட விரோதமாக பங்கு சந்தையில் முதலீடு செய்வதை வழக்கமாக்குகிறார். அதனால் உந்தப்பட்ட பாசுகரும் சட்ட விரோதமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார். இடை தரக்கராக வரும் பாத்திரம், 1990களின் மாபெரும் பங்குச்சந்தை மோசடி பேர்வழி அர்சத் மேத்தாவை நினைவுபடுத்துவது இயல்பே. வங்கி நிர்வாகமும், சிபிஐ யும் இந்த குற்றத்தை கண்டு பிடிக்கிறது.

“இதுல வெல்வது முக்கியமில்லை, எப்ப நிறுத்தணுங்றது தான் முக்கியம்”

எனும் வரிகள், திருடர் சூழ் உலகின் விரிவாக்கத்திற்கு அடித்தளமாக அமையும் என்பதில் இருவேறுகருத்து எனக்கில்லை.

பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான், அவ்வப்போது திருடுபவனை பிடிப்பது கடினம். அப்படிப்பட்டவர்களின் அகத்தூண்டலாக உருப்பெறுகிறார், லக்கி பாசுகர்.

ஒட்டுமொத்த திரையை தனது இயல்பான நடிப்பால் ஆக்கிரமிக்கிறார் துல்கர் சல்மான். நேர்த்தியான திரைக்கதை, கதையோடு நம்மை கட்டிப்போடுகிறது. 1990களின் பம்பாய் நகரை நமது கண்முன் கொண்டுவருகிறார் இயக்குநர், பாராட்டுகள். -இராசகுரு கார் பாலன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!