தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. மதுரை, திருநெல்வேலி, தேனிஉள்ளிட்ட பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதற்படை வீடாக போற்றப்படும் மதுரை திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.
மேலும் திருப்பரங்குன்றம் மலையின் மீது பெய்த மழையால் நீர்ப்பெருக்கெடுத்து வழிந்ததில் அருவி போல் காட்சி அளித்தன இதனைக் பொதுமக்கள் கண்டு களித்து மகிழ்ச்சி அடைந்தனர்.