மதுரையில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா

மதுரை மாகபூப்பாளையம் வீரகாளியம்மன் கோவில் தெருவில் வைத்து மாநகர் மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

மதுரை மாநகர தலைமை ரஜினி ரசிகர் மன்ற துணைச் செயலாளர் அழகர்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ரஜினியின் தீவிர ரசிகரான ரஜினி முருகன் பெயிண்டிங் வேலை பார்த்து வரும் நிலையில் தற்போது குடும்பத்தினர் ஏழ்மையான நிலையில் உள்ளனர்.

அவரது மகளான ரம்யா அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் 600 க்கு 482 மதிப்பெண் பெற்று தற்போது கல்லூரி மேற்படிப்பு தொடர மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்ததை அறிந்த மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் மன்ற துணைச் செயலாளர் கழக அழகர்சாமி அவரது சொந்த நிதியிலிருந்து கல்வி உதவி தொகை 75ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

அதோடு அப்பகுதியில் மிகவும் வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.

இந்த விழாவில் திருப்பரங்குன்றம் நகரச் செயலாளர் கோல்டன் சரவணன் மாவட்ட நிர்வாகி தளபதி ரஜினி மாரி எல்லிஸ் நகர் ரஜினிகாந்த்தி ரஜினி முருகன் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தினர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!