ஆஸ்டின்பட்டியில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்லும் வழித்தட எண் 52 பேருந்து தினந்தோறும் காலை, மதியம், மாலை, இரவு என இவ்வழித்தடத்தில் இயக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன் காலை திருப்பரங்குன்றம் பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தத்திற்கு அருக சென்று கொண்டிருந்தபோது முகூர்த்த நேரங்களில் எதுக்கு இந்த பஸ்ல வரீங்க… முந்தைய ஸ்டாப் ல இறங்க மாட்டீங்களா என பயணிகளை மிரட்டியுள்ளார்.
தமிழக முழுவதும் பேருந்துகளில் பயணிகளிடம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் அன்பான முறையில் நடந்து கொள்ள வேண்டும் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படக்கூடாது என முதல்வர் அறிவுறுத்தி இருந்த நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பேருந்து நடத்துனர் பயணிகளை மிரட்டி, மரியாதை குறைவாக நடந்து கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போக்குவரத்து துறை மேலாளர் அவர்கள் சம்பந்தப்பட்ட நடத்துனரிடம் உரிய விசாரணை செய்து பயணிகளை மிரட்டும் தோனியில் பேசியதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறா வண்ணம் அனைத்து பணியாளர்களுக்கும் போக்குவரத்து துறை மேலாளர்கள் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.