பிரதீப்
தெகிடி, மீசைய முறுக்கு, இரும்புத்திரை, மேயதா மான், லிப்ட் உள்ளிட்ட படங்களில் குண சித்தர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் பிரதீப் விஜயன்.

மரணம்
சென்னையில் அவரது வீடு இரண்டு நாட்கள் திறக்காமல் இருந்த நிலையில், அவருடைய நண்பர்கள் கோட்டூர்புரம் காவல்துறையை அணுகி பூட்டை உடைத்துள்ளனர். அப்போது அந்த வீட்டில் பிரதீப் சடலமாகமீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகிறார்கள். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரது உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுளள்து.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.