இராஜபாளையத்தில் 47 வயது பெண் ஒருவர் வீட்டின் கதவை பூட்டி உள்ளே தீ வைத்துக் கொண்டதால் பரபரப்பு உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனை கொண்டு சென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் இவர் மில்லில் (நூர் பாலை) தொழிலாளி சொந்த வீட்டில் வசித்து வருகிறார்

இவருக்கும் ராமலட்சுமி என்ற செல்விக்கும் (வயது 47) திருமணமாகி இவர்களுக்கு சங்கர் நாராயணன் மற்றும் பாலாஜி என்ற இரு மகன்கள் உள்ளனர் இந்த நிலையில் இன்று கண்ணன் வேலைக்கு சென்றது நிலைகள் ராமலட்சுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார் வீட்டின் மாடியில் உள்ள அரையில் உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துள்ளார். மாடி வீட்டில் இருப்பதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் செல்ல முடியவில்லை உடனடியாக பக்கத்து வீட்டுக்காரர்கள் இராஜபாளையம் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று கதவை உடைத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராமலட்சுமி என்ற செல்வியை மீட்டு இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் இவர் தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்ய என்ன காரணம் என்பது குறித்து இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

error: Content is protected !!