சுனாமி நினைவுதினம் : கலெக்டர்,அரசியல் கட்சியினர் அஞ்சலி.

சுனாமி நினைவுதினமான நே‌ற்று கன்னியாகுமரியில் உள்ள நினைவிடத்தில் மாவட்ட கலெக்டர் மற்றும் அரசியல்கட்சிகள் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம்தேதி ஏற்பட்ட சுனாமியில் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.அப்போது கன்னியாகுமரி கடலில் குளித்துகொண்டிருந்த ஏராளமான சுற்றுலாபயணிகள் கடலில் அடித்துசெல்லப்பட்டு மரணமடைந்தனர்.அவர்களின் நினைவாக கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடற்கரைபகுதியில் நினைவுசின்னம் எழுப்பபட்டுள்ளது.சுனாமிநினைவு தினமான நேற்று காலை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் மலர்வளையம் வைத்து மலர்தூவினார்.நிகழ்ச்சியில் கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன்,மாவட்ட டவுண் பஞ்.,உதவிஇயக்குனர் விஜயலட்சுமி,கன்னியாகுமரி டவுண் பஞ்., செயல்அலுவலர் சத்தியதாஸ்,சுகாதார அலுவலர் முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.காங்கிரஸ் கட்சிசார்பில் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்னன்,விஜய்வசந்த்,மாநில ஓபிசி பிரிவுதலைவர் ஸ்ரீனிவாசன்,ஜார்ஜ்வாஷிங்டன் உள்ளிட்ட பலர்கலந்துகொண்டனர்.திமுக சார்பில் ஆஸ்டின் எம்எல்ஏ, கன்னியாகுமரி பஞ்.,முன்னாள் தலைவர் குமரிஸ்டீபன் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.சிஐடியு மீன்தொழிலாளர் சங்கம் சார்பில் மாவ‌ட்ட துணைதலைவர் ஜேமிஸ் தலைமையில் பலர் அஞ்சலிசெலுத்தினர்.மதிமுக சார்பில் மாவ‌ட்ட செயலாளர் வெற்றிவேலன்,பாலசுப்பிரமணியன்,அருள்ராஜ் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.

Leave a Reply

error: Content is protected !!