மேற்கு வங்காளத்தில் தேர்தல் பரப்புரைக்காக நந்திகிராம் தொகுதிக்குச் சென்ற அம்மையார் மம்தா பானர்ஜி அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
ஒரு மாநிலத்தின் முதல்வர் மீதே துணிந்து வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் கொடுங்கோலர்களின் இப்போக்கு, நாடு எத்தகைய அசாதாரண நிலையில் இருக்கிறது என்பதைத் தெளிவாக வெளிக்காட்டுகிறது.
சனநாயகத்திற்கு சவால் விடக்கூடிய வகையில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் வெட்கித் தலைகுனியச் செய்கிறது. அம்மையார் மம்தா மீதான இத்தாக்குதல் வன்மையானக் கண்டனத்திற்குரியது என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.