கொரோனா இரண்டாவது அலை வேகமாக வீசி வருவதால், திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சித்திரை பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி உற்சவ விழா மற்றும் கிரிவலம் நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு வரும் 26 ஆம் தேதி நடைபெற இருந்த சித்ரா பவுர்ணமி கிரிவலம் நிகழ்ச்சிகள் கொரோனோ பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.வழக்கமான பூஜைகள் நடைபெறும் எனவும் பக்தர்கள் கிரிவல பாதைக்கு வர வேண்டாம் எனவும் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.