
கன்னியாகுமரி அஞ்சுகிராமம் ரோகிணி பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக வைக்கலாமா?
கலெக்டர் அரவிந்த தலைமையில் அதிகாரிகள் ஆய்வு.
கன்னியாகுமரி அஞ்சுகிராமம் அருகே ரோகிணி பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக வைக்கலாமா? என கலெக்டர் அரவிந்து தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக ஏற்கனவே வாக்குப்பதிவு இயந்திரங்கள் குமரிமாவட்டத்தில் கொண்டுவரப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக வாக்குப்பதிவுகள் இயந்திரங்கள், பழவிளை காமராஜர் பாலிடெக்னிக், கோணம் பொறியியல் கல்லூரி போன்ற இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்படுவது வழக்கம். ஆனால் கரோனா காலகட்டத்தில் அங்கு போதுமான இடங்கள் இல்லாததால் நடைபெற இருக்கும் தேர்தலுக்குப் பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களை பத்திரமாக வைப்பதற்கான இடங்களை தேர்வு செய்வதில் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
இதற்காக மாவட்டம் முழுவதும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகேயுள்ள ரோகிணி பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக வைக்கலாமா? என்று ஆய்வு நடத்தப்பட்டது.
மாவட்ட கலெக்டர் அரவிந்த்,தலைமையில் நடந்த ஆய்வில் எஸ்பி பத்ரி நாராயணன், டிஆர்ஓ ரேவதி, ஆர்டிஓ மயில், கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவர்கள் ரோகிணி பொறியியல் கல்லூரியில் இடங்களை ஆய்வு செய்தனர்.