மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கோபால்சாமி மலை என்ற இடத்தில் நடந்து சென்ற, ஜாதி உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த பட்டியலினத்தைச் சார்ந்தவரான முனியாண்டி (55) மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில்,சம்பவ இடத்தில் முனியாண்டி உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பின்பு , அவரது உடலை வைத்து மதுரை - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வாகன விபத்து ஏற்படுத்திய வாகனத்தையும் நபரையும் கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் , அப்பகுதியில் செல்லக்கூடிய வாகனங்கள் இரண்டு மணி நேரமாக பாதிப்புக்கு உள்ளானது.
அப்பகுதியில் நடைபெறக்கூடிய நான்கு வழிச்சாலை மேம்பால பணி காரணமாகவே உயிர் இழப்பு ஏற்படுவதாகவும், சாலை பணியில் ஈடுபடுவோர் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டி தடுப்பு அமைக்காமல் இருப்பதால், இதுவரை மூன்று உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
டி. கல்லுப்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய வாகனத்தையும், நபரையும் கைது செய்வதில் தாமதம் ஏற்படுத்துவதாகவும், விபத்து ஏற்படுத்திய வாகனத்தை விட்டுவிட்டு, நம்பர் பிளேட் இல்லாத வாகனத்தை பிடித்து வைத்து, உயிரிழப்பு ஏற்படுத்திய நபரை காப்பாற்றுவதற்கு காவல்துறையினர் ஈடுபட்டு வருவதை கண்டித்து போராட்டத்தில் , போலீசாரிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து , உரிய நபரை கைது செய்வதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்பு பிணத்துடன் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்..
செய்தியாளர் வி காளமேகம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.