கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவிய தினம் அனுசரிப்பு
கன்னியாகுமரி ஜன 2
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட 21வது ஆண்டை முன்னிட்டு கடல்சீற்றம் காரணமாக படகுதுறையில் திருவள்ளுவர் சிலைக்கு பல்வேறு அமைப்புகள் சார்பாக மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை கடந்த 2000-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
இந்த சிலை நிறுவப்பட்ட 21வது ஆண்டுவிழா நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி கன்னியாகுமரி தமிழ்அமைப்புகள் சார்பில் தனிபடகில் திருவள்ளுவர் சிலைக்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஆனால் சூறாவளிகாற்று, கடல்சீற்றம் காரணமாக படகுசேவை ரத்துசெய்யப்பட்டது.இதனால் தமிழ்அமைப்பினர் கொண்டுவந்த மரத்தினாலான சிறிய திருவள்ளுவர் சிலையை படகுதுறையின் கரையில் வைக்கப்பட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன்,முன்னாள் எம்.பி ஹெலன்டேவிட்சன்,முன்னாள் நகராட்சி தலைவி மீனாதேவ்,பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி,முன்னாள் பிஷப் பீட்டர்ரெமிஜியூஸ் பால.ஜனாதிபதி,பாஜக தொழில்பிரிவுமாவட்டசெயலாளர் சுபாஷ்,சொளந்தர்ராஜன்,சுடலைமணி,தமிழறிஞர்கள் பத்மநாபன்,தமிழ்குளவி,சிவநாராயண பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.