கன்னியாகுமரி- மணக்குடி இணைப்பு பாலத்திற்கு லூர்தம்மாள் சைமன் பெயர்.

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி இணைப்புபாலத்திற்கு முன்னாள் அமைச்சர் லுர்தம்மாள்சைமன் பெயர் சூட்டப்பட்டது.
மேற்குதொடர்ச்சி மலையில் உருவாகும்.

பழையாறு,சுசீந்திரம், வடக்கு தாமரைகுளம் வழியாக பாய்ந்து மணக்குடி கடலில் கலக்குகிறது.மணக்குடி காயலின் கிழக்கு பக்கம் உள்ள மீனவகிராமமான கீழமணக்குடியையும், மேற்குபக்கம் உள்ள மீனவகிராமமான மேலமணக்குடியையும் இணைக்கும் வகையில் பிரம்மாண்டமான இணைப்புபாலம் அமைக்கப்பட்டது.
இந்த பாலம் கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பேரலையில் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டது. இந்நிலையில் அங்கு தற்காலிக இரும்பு பாலம் அமைக்கப்பட்டது.

பின்னர் 21 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் சென்னை நேப்பியர் பாலம் போன்ற பிரமாண்ட பாலம் இந்த பகுதியில் அமைக்கப்பட்டது. இந்தப் பாலத்திற்கு காமராஜர் ஆட்சி காலத்தில் அவரது அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த லூர்தம்மாள் சைமனின் பெயரை சூட்ட வேண்டும் என்று பல்வேறு அமைப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் அண்மையில் குமரி மாவட்டத்திற்கு வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தப் பாலத்திற்கு லூர்தம்மாள் சைமன் பெயர் சூட்டப்படும் என்று உறுதியளித்து விட்டு சென்றார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வந்தார். இந்நிலையில் மணக்குடி பாலத்திற்கு லூர்தம்மாள் சைமன் பாலம் என்ற பெயர் பலகை பாலத்தின் இரண்டு பக்கத்திலும் பொருத்தப்பட்டது

Leave a Reply

error: Content is protected !!