குமரி மாவட்ட அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பில் வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்ட மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிராகவும் தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி இந்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குமரி மாவட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரில் அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பில் வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட மசோதா விவசாயிகளுக்கு எதிராகவும், தனியார் பெரு முதலாளிகளுக்கு சாதகமாகவும் இருக்கிறது. எனவே விவசாயிகளை பாதிக்கும் இந்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
வேளாண் மசோதாவை திரும்பப் பெறாவிட்டால் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்களை ஒன்றுதிரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும் தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களை உடனடியாக முழுமையாக திறப்பதற்கு தலைமை நீதியரசர் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற கீழே உள்ள படத்தை கிளிக் செய்து வாட்ஸ்அப் குழுவில் இணையவும்.
