‘பாஜக ஒரு ஏமாற்றுக் கட்சி’அரசியலுக்காக எதையும் செய்யும் – மம்தா பானர்ஜி கடும் தாக்கு

பாஜக ஒரு ஏமாற்றுக்கட்சி; அரசியலுக்காக எதையும் செய்யக்கூடியதுதான். குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து நாங்கள் அதை எதிர்த்து வருகிறோம் என மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:-

அமித் ஷா நேற்று பொய்களின் குப்பைகளை பேசியுள்ளார். எங்கள் மாநிலம் தொழிலில் ‘பூஜ்ஜியம்’ என்று அவர் கூறினார், ஆனால் நாங்கள் எம்.எஸ்.எம்.இ துறையில் முதலிடத்தில் இருக்கிறோம். எங்களால் கிராமப்புற சாலைகளை உருவாக்க முடியாது என்று அவர் கூறினார், ஆனால் நாங்கள் அதில் முதலிடத்தில் இருக்கிறோம். இது இந்திய அரசின் தகவல்.

பாஜக ஒரு ஏமாற்றுக்கட்சி; அரசியலுக்காக எதையும் செய்யக்கூடியதுதான். குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து நாங்கள் அதை எதிர்த்து வருகிறோம் …

அவர்களால் குடிமக்களின் தலைவிதியை தீர்மானிக்க முடியாது, அவர்கள் தங்கள் தலைவிதியை தீர்மானிக்கட்டும். நாங்கள் குடியுரிமை திருத்த சட்டம் , என்.பி.ஆர், என்.ஆர்.சிக்கும் எதிரானவர்கள். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் டிச.29-ம் தேதி மேற்குவங்கம் பிர்பூரில் பேரணி நடைபெறும் என கூறினார்.

Leave a Reply

error: Content is protected !!