இராஜபாளையம் அருகே மின்சாரம் தாக்கி 17 வயது பள்ளி மாணவன் பலி தளவாய்புரம் போலிசார் விசாரணை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள முறம்பு மில்கேட் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து கொத்தனார் வேலை பார்த்து வருகிறார் காளிமுத்து விற்க்கு முத்துமாரிக்கும் திருமணம் ஆகி 2 ஆண் குழந்தைகள் உள்ளன இவர்களின் மூத்தமகன் பொன் சீனி வயது 17 இரண்டாவது மகன் பிரபாகரன் இருவரும் படித்து வருகின்றனர். இன்று காலை வீட்டில் பாத் ரூமிற்க்கு இயற்கை உபாதயை கழிப்பதற்காக சென்றபொழுது லைட் சுவிட்சை பொன் சீனி போட்ட போது மின்சாரம் தாக்கி துடித்துள்ளார் இவரது தம்பி பிரபாகரன் காப்பாற்ற முயன்ற போது இருவருக்கும் மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் பிரபாகரன் சிறுகாயங்களுடன் தப்பித்துவிட்டார் பொன் சீனி சம்பவ இடத்திலே கீழே விழுந்துள்ளார். அவரது உடலை இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதித்தபோது ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானது குறித்து தளவாய்புரம் போலீஸ்சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

error: Content is protected !!