விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் வேளாண் மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தியும் டெல்லியில் போரடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசை கண்டித்து CPI . CPM கட்சியினர் காந்தி சிலை ரவுண்டாவில் இருந்து ஊர்வலமாக வந்து ஸ்டேட் பேங்க் முன்பு முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக ஊர்வலமாக வந்தவர்களை காவல்துறை தடுத்து நிறுத்திய போது காவல்துறையை தள்ளிவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஊர்வலமாக வந்து ஸ்டேட் பேங்க் முன்னிலையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்டோர் கைது செய்தனர்.
