பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 739 பேர் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
உலகளவில் அதிக கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் பிரேசில் உள்ளது. பலி எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது.
அந்த நாட்டு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது:
“புதிதாக 33,704 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,84,20,598 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 739 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 5,13,474 ஆக உயர்ந்துள்ளது.”