திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் தைத்திருநாள் பொங்கல் முதல் நாளன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக வாடிவாசல் மற்றும் தடுப்பு அரண் அமைக்கும் பணிகளுக்காக கம்புகள் நடப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் பொங்கல் தைத்திருநாள் முதல் நாளன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் .
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
இதற்காக அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் வாடிவாசல் அமைப்பதற்காக தென்னை தூண்கள் நடப்பட்டு மற்றும் பார்வையாளர்களுக்கான தடுப்பு அரண் பணிகளுக்காக சவுக்கு கம்புகள் நடபட்டு வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறும் மாடுபிடி வீரர்களுக்கு நாளை (09.ot.21) பரிசோதனை அவனியாபுரம் அரசு ஆரம்பப் பள்ளியில் நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து அவனியாபுரத்தில் அனைத்து ஜல்லிக்கட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.