
நடிகர் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ ஜூலை 12-ல் வெளியாக இருக்கிறது. ஷங்கர் இயக்கியுள்ள இதில் சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படத்தின் புரமோஷனில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படத்தில் முதலில் கமல்ஹாசன் நடிப்பதாக இருந்தது. ‘ரோபோ’ என்று பெயரிடப்பட்ட அதில் ப்ரீத்தி ஜிந்தா நாயகியாக ஒப்பந்தம் ஆனார். சில காரணங்களால் கமல்ஹாசன் அதிலிருந்து விலகினார். பிறகு ரஜினிகாந்த் நடித்தார். இந்நிலையில் ‘ரோபோ’வில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். அதில் ” அந்தப் படத்தில் நடிக்க, ஷங்கர் என்னை அணுகினார்.PauseMute
எனது கால்ஷீட், அப்போதைய மார்க்கெட் நிலவரம், எனது சம்பளம் போன்ற வணிகப் பிரச்சினைகளால் அந்த நேரத்தில் நான் அதில் இருந்து விலக நேரிட்டது. அதையடுத்து அந்தப் படத்தை ஷங்கர் விட்டுவிடுவார் என்று நினைத்தேன். ஆனால் சரியான நேரத்தில் ரஜினியை வைத்து எடுத்து வெற்றிபெற்றார்” என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.