மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள பன்னியான் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவர் தனது இருசக்கர வாகனத்தில் மதுரை நோக்கி சென்ற போது அவரை வழிமறித்த 7 பேர் கொண்ட கும்பல் செந்தில்குமாரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சராமரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடினர்.
சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரை மாவட்ட எஸ்.பி. சுஜித்குமார் கொலை நடைபெற்ற இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடலை கைப்பற்றிய செக்கானூரணி போலீசார் உடற்கூராய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்த செந்தில்குமார் தனது நண்பர்களுடன் கணவாய் மலை பகுதியில் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் நண்பர்களே அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொலை செய்து தப்பியோடிய 7 பேர் கொண்ட கும்பலை செக்கானூரணி போலீசார் தேடி வருகின்றனர்.
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற கீழே உள்ள படத்தை கிளிக் செய்து வாட்ஸ்அப் குழுவில் இணையவும்.