கன்னியாகுமரி காவல் நிலையத்தில் மும்மதங்களைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் மும்மதங்களைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்ட சிறப்பு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். அஞ்சுகிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் முருகேசன், விஜயகுமார், டேனியல் அருள் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக திருமூல நகர் பங்குத் தந்தை பீட்டர் பாஸ்டியன், அதிமுக வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜெஸீம், பேரூர் செயலாளர் ராஜபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து காவல் நிலையத்தின் சார்பில் பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏட்டுக்கள் மணிகண்டன், துரைப்பாண்டியன், அஜித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.