தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 26 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் நிகழும் குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் வகையில் சாத்தான்குளம் பகுதிகளை சுற்றிலும் சுமார் 80 CCTV காமிராக்கள் அமைக்க கடுமையாக முயற்சி செய்து 18.12.2020 ம் தேதி ஆரம்பகட்டமாக 3 காமிராக்கள் நிறுவி பொதுமக்கள் மத்தியில் காவல்துறை மீதான நம்பிக்கையினை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பெர்னார்ட் சேவியர், உதவி ஆய்வாளர்கள் திரு. ராஜா, திருமதி. முத்துமாரி, தலைமை காவலர்கள் திரு. கோபாலகிருஷ்ணன், திரு. ஐசக் மகாராஜா ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
கடந்த 19.12.2020 அன்று நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட அகப்பiகுளத்தில் உள்ள பேபி அலீஸ் புளோரா என்பருக்கு சொந்தாமான ஆளில்லாத வீட்டில் சுமார் 520 கிலோ எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கைப்பற்றிய நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. விஜயலெட்சுமி, உதவி ஆய்வாளர் திரு. தங்கேஸ்வரன், முதல் நிலை காவலர் திரு. சுதன், காவலர் திரு. அந்தோணி பிரதீஷ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடந்த 17.12.2020 அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பேயன்விளையில் உள்ள சக்தி விஜயன் என்பவரின் வீட்டின் பின்னால் உள்ள குடோனில் பதுக்கி வைத்திருந்த 250 கிலோ எடையுள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கைப்பற்றியும், எதிரிகள் இருவரையும் கைது செய்த ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. செல்வி, தலைமை காவலர் திரு. முத்துகுமார், முதல் நிலை காவலர்கள் திரு. தங்கவேல், திரு. ரமேஷ் கண்ணன், திரு. மாணிக்கராஜ், திருமதி. ஷியாமளா ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
முத்தையாபுரம் காவல் நிலைய கொலை வழக்கு எதிரிகள் முத்துராஜ், செல்வகுமார் ஆகிய இருவரும் தங்களது தாயார் என்றும் பாராமல் கொலை செய்தவர்களை விரைந்து கைது செய்த முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அன்னராஜ், தலைமை காவலர்கள் திரு. சிவக்குமார், திரு. சுப்பையா, முதல் நிலை காவலர் திரு. சங்கரசுப்பு ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
முத்தையாபுரம் காவல் நிலைய விபத்து வழக்கின் எதிரி சந்துரு என்பவரை கண்டுபிடித்து கைது செய்ய உதவியாக இருந்த முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் திரு. மாரிச்செல்வம் என்பவரின் மெச்சதகுந்த பணிக்காவும்,
தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 நீதிமன்றத்தில் பிடியாணை எதிரி ராஜ் ரொசாரியோ மேக்ஸ் என்பவர் மீது வழக்கு நடைபெற்று வரும் நிலையில் நீண்ட நாட்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. மேற்படி எதிரி ஹைதராபாத்தில் இருந்து வந்தவரை பிடித்து 16.12.2020 அன்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றிய சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சங்கர், முதல் நிலை காவலர் திரு. பொன்பாண்டியன், காவலர் திரு. சிவக்குமார் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
கடந்த 16.12.2020 அன்று சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேம்பார் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட 955 கிலோ கடல் அட்டையை கடத்தி சென்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆவுல் மைதீன் என்பவரை கைது செய்தும், கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட லோடு வேனை கைப்பற்றியும் சூரங்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய உதவியாக இருந்த சூரங்குடி காவல் நிலைய தலைமை காவலர் திரு. பால்பாண்டியன் , முதல் நிலை காவலர் திரு. ராஜாபாண்டி, காவலர் திரு. காத்தனன்; ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காவும்,
காவல் ஆய்வாளர்கள் உட்பட 26 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வன், தனிபிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.