மதுரை திருமங்கலம் அருகே செங்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் உள்ள ஆற்றின் குறுக்கே தரைப்பாலத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு அத்வானி ரத யாத்திரை செல்வதாக இருந்தது. அப்போது பாலத்தின் அருகே பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதிதாக மேம்பாலம் அமைக்கப்பட்டது.
அமைக்கப்பட்ட சில வருடங்களுக்குள் இந்த மேம்பாலம் பலத்த சேதம் அடைந்துள்ளது.பாலத்தில் விரிசல்கள் பலமாக ஏற்பட்டுள்ளதால் பாலம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலை துறையினர் இந்த பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.