
விருதுநகர் மாவட்டத்தில் வைரலாகும் கலக்கல் கல்யாண பத்திரிக்கை…..
சிலர் திருமணங்களை வித்தியாசமாக செய்வார்கள், ஆடம்பரமாக செய்வார்கள், கடன் வாங்கி செய்வார்கள், இந்த கொரோனா தொற்று பிரச்சினையால் கடந்த ஐந்து மாதங்களாக, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் போட்டிருந்தது தமிழ்நாடு அரசு. இப்போது கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கியதால் திருமண விழாக்கள் பழைய உற்சாகத்துடன் நடந்து வருகிறது. அதிலும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என ஒருவர் அச்சடித்து வழங்கிய திருமண அழைப்பிதழ், சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள ஆகாசம்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் இவருக்கும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பானுமதி என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.
இதற்கு இரு வீட்டார்கள் சார்பில், அனைவரையும் கவரும் படியான வாசகங்களுடன், திருமண அழைப்பிதழ் அச்சடித்து வழங்கியுள்ளனர்.
நீங்க பஸ் ஓடலன்னு வராம இருந்துராதீங்க, ஆட்டோ இல்லைன்னாலும் பக்கத்து வீட்ல பைக் கடன் வாங்கிட்டாவது வந்துருங்க, குடி குடியைக் கெடுக்கும் எனவே கொஞ்சமா குடிங்கன்னு அட்வைஸ் செய்து, அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார்கள்.