மதுரை மாநகரின் இதயமாக செயல்பட்டுவரும் ரயில் நிலையம் – பெரியார் பேருந்து நிலையத்துக்கு இடையே பிரிட்டிஷ் அரசாங்க ஆட்சி காலத்தில் 1907-ல் இரண்டு ஏக்கரில் விக்டோரியா எட்வர்டு மன்றம் உருவாக்கப்பட்டது.
600 கோடி ரூபாய் சொத்து மதிப்பு:
சுமார் 600 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள விக்டோரியா எட்வர்டு மன்றம் ஆரம்ப காலத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட முக்கிய நபர்களை நிர்வாகிகளாக நியமித்து, சங்கமாகப் பதிவுசெய்து டவுன் ஹால், நூலகம், அருங்காட்சியகம், விளையாட்டுத்திடலுடன் இந்த மன்றம் செயல்பட்டு வந்தது. பிற்காலத்தில் டவுன் ஹால் கட்டிடம் ‘தங்க ரீகல்’ தியேட்டராக மாறியுள்ளது.
‘‘வக்பு வாரியக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் இஸ்மாயில் கட்டுப்பாட்டிலுள்ள இந்த மன்றத்தை மீட்க வேண்டும்’’ என்று கடந்த சில வருடங்களக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து

“விக்டோரியா எட்வர்டு மன்றம் விரைவில் அதிரடியாக மீட்கப்படும்”
“நீதி கிடைக்கவில்லையெனில் ஊழல்வாதியிடம் சிக்கியிருக்கும் மன்றத்தை அதிரடியாக மீட்டு மக்கள்வசம் ஒப்படைப்போம்”
என்ற முழக்கங்களுடன் விக்டோரியா எட்வர்டு மன்ற மீட்பு இயக்கத்தினரும், நாம் தமிழர் கட்சியினரும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.
எட்வர்டு மன்ற நிர்வாகத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ‘பொறியாளர் செ.வெற்றிக்குமரன்’ தெரிவித்ததாவது:
1907-ம் ஆண்டில் ‘பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டு, சங்கமாகப் பதிவுசெய்யப்பட்ட இந்த மன்றத்தை, முக்கியப் பிரமுகர்கள் நல்லபடியாக நிர்வாகம் செய்துவந்தார்கள். 1998-ல் கௌரவச் செயலாளராகப் பொறுப்புக்கு வந்த இஸ்மாயில், முழு நிர்வாகத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, பல்வேறு குளறுபடிகளைச் செய்துவருகிறார்.

மக்களுக்கு பயன்படாத நூலகம்:
மன்றத்திலுள்ள நூலகம், அருங்காட்சியம் ஆகியவற்றுக்குள் மக்களை அனுமதிப்பதில்லை. நூலகத்தைத் தனது ஓய்வு இல்லமாகப் பயன்படுத்துகிறார். இஸ்மாயிலின் மகனுக்கும் மன்றத்தில் தனி அலுவலகம் உள்ளது. வரவு செலவு கணக்குகளை யாரும் கேட்க முடியாது. அப்படிக் கேட்கும் நிர்வாகிகளை நீக்கிவிடுகிறார்கள். கேள்வி கேட்பவர்களை அடியாட்கள் மூலம் மிரட்டப்படுகிறார்கள். ‘மன்றத்தின் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளரை 50 உறுப்பினர்கள் முன்மொழிய வேண்டும்; 50 உறுப்பினர்கள் வழிமொழிய வேண்டும்’ என்று புதிய விதியை உருவாக்கினார். யாரும் தன்னை எதிர்த்து போட்டியிடக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு இது பற்றியெல்லாம் எட்வர்டு மன்ற மீட்பு இயக்கத்தினர் அரசு அதிகாரிகளுக்குப் புகார் மனுக்கள் அனுப்பத் தொடங்கியதும், வரவு, செலவு அறிக்கை ஒன்றை இஸ்மாயில் வெளியிட்டார்.
அட்டை போட 5 லட்சம்!
அதில் நூலகத்துக்கு 3 லட்சம் ரூபாய்க்கு புத்தகம் வாங்கியதாகவும், அவற்றுக்கு அட்டை போட 5 லட்சம் ரூபாய் செலவானதாகவும் கணக்கு எழுதியிருந்தார். புத்தகமே வாங்காமல், அவற்றுக்கு அட்டை வேறு போட்டதாகவும் ஊழல் செய்திருக்கிறார். மன்ற வளாகத்திலுள்ள 27 கடைகள் வாடகைக்கு விடப்பட்டு அவற்றிலிருந்து பெருமளவு வருமானம் வருகிறது. ஆனால், அதில் பாதியளவுதான் கணக்கில் காட்டப்படுகிறது. தங்க ரீகல் தியேட்டரை வெறும் 30,000 ரூபாய் மாத வாடகைக்கு விட்டிருப்பதாகக் கணக்கு எழுதியிருக்கிறார்.

தனி அதிகாரி நியமனம்?
பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்கள் எதையுமே நடத்து வதில்லை. ஆண்டுதோறும் புதுப்பிக்கவேண்டிய சங்கத்தின் பதிவைக்கூட புதுப்பிப்பதில்லை. இது பற்றி கலெக்டர் தொடங்கி முதலமைச்சர், ஆளுநர் வரை புகார் அனுப்பினோம். அந்தப் புகார் மனுக்கள், மதுரை மாவட்டப் பதிவாளருக்கு அனுப்பப்பட்டு விசாரிக்க உத்தரவிடப்பட்டது. பதிவாளர் விசாரித்து, கடந்த ஏப்ரல் 24-ம் தேதியன்று, ‘புகார் உண்மைதான். இந்த அமைப்பைக் கலைத்துவிட்டு தனி அதிகாரியை நியமிக்கலாம்’ என்று பரிந்துரைத்து, மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மாவட்ட ஆட்சியரும் கடந்த மே மாதம் அதற்கு ஒப்புதல் கொடுத்துவிட்டார். ஆனால், இதுவரை தனி அதிகாரி நியமிக்கப்படவில்லை” என்பது குறிப்பிடத்தக்கது.மதுரை மாவட்ட ஆட்சியர் துரிதமாக செயல்பட்டு தனி அதிகாரியை நியமனம் செய்து விக்டோரிய எட்வர்டு மன்றத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.தமிழ்நாடு நிதியமைச்சர் தொகுதியில் 600 கோடி மதிப்புள்ள சொத்து தனிநபர் ஆக்கிரமிப்பில் இருப்பது குறித்து சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேதனை அடைந்து வருகின்றனர். தனி நபரிடம் இருந்து 600 கோடி மதிப்புள்ள சொத்தை மீட்டு பொதுமக்கள் வசம் ஒப்படைக்க தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டிஆர் பழனிவேல் தியாகராஜன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் எதிர்பார்த்து வருகின்றனர் வருகின்றனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.