கன்னியாகுமரி: பாஜக அரசு தங்களுக்கு அடுத்த கட்டமாக யாருமே இருக்கக் கூடாது என்று முடிவு செய்து வேலை பார்க்கின்றனர். ஆனால் இதையெல்லாம் தாண்டி காங்கிரஸ் அரசு நிச்சயம் வெல்லும் விஜய் வசந்த் பரபரப்பு பேட்டி.
2020 ஆம் ஆண்டு காரோனாவினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு பெரும் கஷ்டப்பட்டனர். இருந்தாலும் தொடங்க இருக்கும் 2021 ஆம் ஆண்டு எழுச்சியுடன் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
திரைப்பட துறை வாழ்க்கை எதார்த்தமாக அமைந்தது. அழகாக சென்று கொண்டு இருந்தது. தற்போது பொருத்தளவில் திரை வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியவில்லை. வியாபாரத்தைக் கவனிக்க வேண்டியது இருப்பதாலும் அப்பாவின் மறைவுக்குப் பிறகு அவர் விட்டு சென்ற மக்கள் பணிகளை செய்ய வேண்டும் என்பதாலும் திரைப் படங்களில் கவனம் செலுத்த முடியவில்லை.
ரஞ்சன் என்ற புது டைரக்டர் இயக்கத்தில் மை டியர் லிசா இந்த திரைப்படத்தில் நானும் சாந்தினி என்ற நடிகையும் நடித்துள்ளோம். இந்த திரைப்படம் தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. விரைவில் திரைப்படம் வெளியாக உள்ளது. சில திரைப்படங்களை தயாரித்துள்ளேன். பின்னர் தந்தை இது வேண்டாம் என்று கூறியதால் அதை விட்டு விட்டோம்.
தற்கொலை என்பது எதற்குமே தீர்வாகாது. அந்த ஒரு நொடியில் நாம் சிந்திப்பதை நிறுத்தினால் நல்ல வாழ்க்கை நமக்கு காத்திருக்கிறது. ஒரு நொடி மனமாற்றம் தற்கொலை வரை கொண்டு சென்று விடுகிறது. சிலர் தற்கொலைக்கு முயன்று இறக்க முடியாமல் காலமெல்லாம் பெட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்கொலை எதற்குமே தீர்வாகாது நண்பர்களுடன் நேரத்தை செலவழியுங்கள், குடும்பத்திடம் தனது கஷ்டத்தை தெரிவித்து தற்கொலைக்கான தீர்வை கண்டறியுங்கள்.
பள்ளி கல்லூரி காலங்களில் ஏராளமான சமூகப்பணிகள் செய்துள்ளேன். பின்னர் எனது தந்தைக்கு உதவியாக அவரது அரசியல் பாதையில் நிறைய உதவிகள் செய்துள்ளேன். அவர் சொல்ல முடியாத சில கட்சி கூட்டங்களில் நான் கலந்து கொண்டுள்ளேன். தேர்தல் பிரச்சாரம், ரதயாத்திரை போன்றவற்றில் அவருக்கு தொடர்ந்து உதவி உள்ளேன். இதனால் அவர் பின்னால் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருந்தேன். எனக்கு அரசியல் களம் புதிது என்பது தவறு. அப்பாவின் பின்னால் இருந்து செயல்பட்டு வந்தேன். தற்போது அப்பாவின் மறைவுக்கு பிறகு அப்பாவின் பணியை அப்பாவின் வழியில் செய்து கொண்டிருக்கிறேன்.
பாராளுமன்ற இடைத்தேர்தல் விரைவில் வர உள்ளது. கட்சி மேலிடம் யாரை வேட்பாளராக நிறுத்துகிறதோ அவரை வெற்றி பெற வைப்போம். வேட்பாளர் குறித்து இதற்குமேல் கூற முடியாது. ஆனால் பாஜக மீது உள்ள வெறுப்பும், எங்கள் மீது இருக்கும் விருப்பமும் நிச்சயம் எங்களை வெற்றி பெறச் செய்யும். மேலும் எங்கள் கூட்டணி பலமான கூட்டணி. வெற்றிக் கூட்டணி என்று சொல்வோம். அதனால் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியடையும்.
விளையாட்டு துறை மிக முக்கியமான துறையாகும். இதில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். நமது மாவட்டத்தை பொறுத்த அளவில் விளையாட்டுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். எனது அப்பாவின் கனவு சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும் விளையாட்டு கிராமம் கொண்டு வர வேண்டும் என்பது தான். அவரது கனவை நிறைவேற்ற குடும்பத்தில் ஒருவராக கண்டிப்பாக முயற்சிப்போம்.
காங்கிரஸ் கட்சி யாரையும் அழித்து மேலே வரவேண்டும் என்று எண்ணியதில்லை. ஆனால் இப்போது இருக்கும் பாஜக அரசு தங்களுக்கு அடுத்த கட்டமாக யாருமே இருக்கக் கூடாது என்று முடிவு செய்து வேலை பார்க்கின்றனர். ஆனால் இதையெல்லாம் தாண்டி காங்கிரஸ் அரசு நிச்சயம் வெல்லும் என்று கூறினார்.