கன்னியாகுமரியில்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் நேற்று மாலை சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது
கிறிஸ்துமஸ் பண்டிகையை நேற்று உலகமெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது . தற்போது கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்விடுமுறை,என்பதாலும் மாலையில் சுற்றுலா தலமான கன்னியாகுமரி,சொத்தவிளை பீச், வட்டக்கோட்டை உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.கன்னியாகுமரி முக்கடல்சங்கமம்,கடற்கரைசாலை, சன்செட்பாயின்ட் போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.சுற்றுலா பயணிகள் வாகனங்களால் பல இடங்களில் வாகன நெரிசல் காணப்பட்டது.