மதுப்பிரியர்களுக்கு இடியாய் வந்த செய்தி..!! வெடிக்கும் போராட்டம்..! தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் இயங்காது..?

டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், கால முறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 11ஆம் தேதி தலைமைச் செயலகம் முன்பு காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தின் முன்னதாக சங்கத்தின் மாநில தலைவர் பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிப்ரவரி 10ஆம் தேதி டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு இருந்து பணியாளர்களின் ஊர்வலம் புறப்படும். எத்தனை ஆண்டு காலம் பணி செய்தாலும் எங்களுக்கு கிடைக்க வேண்டிய கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்திற்காக நாங்கள் ஒவ்வொரு மாவட்டமாக சென்று சந்தித்து வருகிறோம். சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்பார்கள்” என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் பல டாஸ்மாக் சங்கங்கள் இருக்கும் நிலையில், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தில் அதிக உறுப்பினர்கள் இருப்பதால், போராட்டம் நடைபெறும் நாட்களில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் அபாயம் இருக்கிறது. அதே நேரத்தில் பிற சங்க ஊழியர்களை வைத்து மதுக்கடைகள் மூடப்படாமல் விற்பனை நடக்கும் என்கின்றனர் டாஸ்மாக் அதிகாரிகள்.

தமிழ்நாடு அரசுக்கு அதிக லாபம் மற்றும் வருவாய் தரக்கூடிய துறையாக டாஸ்மாக் இருந்தாலும், அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர பணி கிடையாது. தற்போது அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலி அடிப்படையில் தான் பணியாற்றி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதே வாக்குறுதியை திமுகவும் கொடுத்திருந்தது. ஆனால், தற்போது வரை டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!