ஒரே வாரத்தில் மூன்று துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்… இது தமிழகமா, வடமாநிலமா?- மு.க. ஸ்டாலின்

பழனியில் நேற்று தியேட்டர் அதிபர் இரண்டு பேரை பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்ட நிலையில், மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் ‘‘தமிழகத்தில் தலைவிரித்தாடும் துப்பாக்கிக் கலாச்சாரம்; கள்ளத்துப்பாக்கிகளின் கணக்கற்ற புழக்கம்! காவல்துறையை வைத்திருக்கும் முதல்வருக்கு சுயவிளம்பரப் படப்பிடிப்புக்கு மட்டும்தான் நேரம் இருக்கிறதா?’’ எனப் பதிவிட்டுள்ளார்.

சென்னையில் கடந்த வாரம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூர் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். சிறுபனையூர் தக்கா கிராமத்தில் ஷான் என்பவர் மீது ஹாரூண் துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த நிலையில்தான் பழனியில் இன்று துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது.

Leave a Reply

error: Content is protected !!